தேர்தல் ஆணையம் முதல் முறையாக இந்த தேர்தலில் ‘நோட்டா’ என்ற பொத்தானை வாக்களிக்கும் கருவியில் அறிமுகப்படுத்தி இருந்தது. ‘நோட்டா’ என்பதற்கு ‘மேற்காணும் வேட்பாளர்களில் யாருக்கும் ஓட்டு அளிக்க விருப்பம் இல்லை’ என்பது அர்த்தம்.
இந்த தேர்தலில் 543 தொகுதிகளில் வாக்களித்த, மொத்த வாக்காளர்களில் 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 பேர் (மொத்த ஓட்டில் 1.1 சதவீதம்) நோட்டாவுக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். மாநில அளவில் புதுச்சேரியில் 3 சதவீதம் பதிவாகி இருந்தது. இவ்வாறு மற்ற மாநிலங்களில் வாக்கு விவரம் சதவீதத்தில் வருமாறு:–
மேகாலயா–2.8, குஜராத், சத்தீஷ்கார், தத்ரா–நாகர் ஹவேலி தலா–1.8, பீகார்–1.6, ஒடிசா, மிசோரம், ஜார்கண்ட், டாமன் டையூ தலா–1.5, சிக்கிம், தமிழ்நாடு தலா–1.4, மத்தியபிரதேசம்–1.3, திரிபுரா, கேரளா, கோவா, ராஜஸ்தான் தலா–1.2, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அருணாச்சலபிரதேசம் தலா–1.1. மிகக் குறைவாக 0.3 சதவீத நோட்டா வாக்குகள் லட்சத்தீவுகள், அரியானா, நாகலாந்தில் பதிவாகி இருக்கிறது. பஞ்சாப்–0.4 சதவீதங்களாகும்.
நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற வதோரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்தபடி மூன்றாவது இடம் நோட்டாவுக்கு (18,053) பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ஜனதாதளம், மதசார்பற்ற ஜனதாதளம் இந்திய கம்யூனிஸ்டு, சிரோமணி அகாலிதளம் ஆகிய கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகளை விட குறைவாகும்.
No comments:
Post a Comment