தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. அதில், ஊத்தங்கரை மாணவி சுசாந்தி முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
ஊத்தங்கரையில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
2ம் இடத்தைப் பிடித்த தருமபுரி மாணவி அலமேலு 1,192 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
3ம் இடத்தை 2 மாணவர்கள் பிடித்துள்ளனர். செங்கல்பட்டு பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யாவும், நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளி மாணவன் துளசிராஜனும் 1,191 மதிப்பெண்கள் எடுத்து 3ம் இடத்தில் உள்ளனர்.
நூறுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்கள்:
கணிதப் பாடத்தில் - 3,882
இயற்பியல் பாடத்தில் - 2,710
வேதியியல் பாடத்தில் - 1,693
உயிரியல் பாடத்தில் - 652
கணினி அறிவியல் பாடத்தில் - 993
தாவரவியல் பாடத்தில் - 15
வணிகவியல் பாடத்தில் - 2,581
கணக்கு பதிவியல் - 2,403
வணிக கணிதம் - 605
தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள ...
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in இணையதளங்களைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment