தமிழகமெங்கும் பிளஸ் 2 தேர்வின் முடிவு இன்று காலை வெளியானது. இந்த தேர்வில் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் மொத்தம் 195 மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 99 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளி அதிரையளவில் சாதனை நிகழ்த்தியுள்ளது. இவை சென்ற ஆண்டைவீட இந்த ஆண்டு கூடுதலாக 2 சதவிதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள மாணவிகளின் விவரங்கள் :
முதல் இடம் : A. நஸரீன்
த/பெ : அஹமது ( சாரா )
பெற்ற மதிப்பெண்கள் : 1082
இரண்டாம் இடம் : A. நசீமா
பெற்ற மதிப்பெண்கள் :1071
மூன்றாம் இடம் ( இரண்டு பேர்கள் ) :
M. பாத்திமா சுஹைலா
K. ஜில்பானா
பெற்ற மதிப்பெண்கள் : 1066
அதிரையளவில் உள்ள பள்ளிகளில் முதல் இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தியதோடு மட்டுமில்லாமல் 99 சதவீத வெற்றிவாய்ப்பையும் பெற்றுதந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகம் - தலைமை ஆசிரியை - ஆசிரியைகள் - அலுவலக பணியாளர்கள் - பெற்றோர்கள் - மாணவிகள் ஆகியோருக்கு அதிரை நியூஸ் சார்பில் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டோம்.
சாதனை நிகழ்த்தியது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சிராஜ்னிஷா அவர்களை சந்தித்து கேட்டறிந்தோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment