ஆனால் நேற்று வெளியிடப்பட்ட என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் 32 தொகுதிகளைக் கைப்பற்றி தேசிய அளவில் 3வது இடத்தை அண்ணா அதிமுக பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் 9 தான்
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக 9 இடங்களைத்தான் அதிமுக பெற்றிருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக 23 இடங்களைப் பெற்று 3வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்கிறது என்.டி.டி.வி. எக்ஸிட் போல்.
திரிணாமுல் பின்னடைவு 3வது இடத்தில்
இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் 30 இடங்களைத்தான் மேற்கு வங்கத்தில் கைப்பற்றி 4வது இடத்துக்கு நகர்ந்திருப்பதாகவும் என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்துள்ளன.
மாநிலக் கட்சிகளும் என்.டி.டி.வி. எக்ஸிட் போல் முடிவுகளும்
அதிமுக - 32 ; திரிணாமுல் காங்கிரஸ் - 30 ; சிவசேனா - 15 ; பிஜூ ஜனதா தளம் - 13 ; தெலுங்கு தேசம் - 12; சமாஜ்வாடி கட்சி - 12; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - 12 ; தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி - 11; ராஷ்டிரிய ஜனதா தளம் - 10 இடங்களைக் கைப்பற்றுமாம்.
திமுக நிலை?
திமுகவைப் பொறுத்தவரையில் 5 இடங்களைத்தான் பெறும் என்பதால் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment