பா.ஜ.க. மதவாத தீயை நாடு முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.
சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து காரைக்குடி நகர் பகுதியில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பிராசாரம் மேற்கொண்டடு பேசும்போது, ”மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது.
இரண்டு திராவிட கட்சிகளுக்கு வாக்களித்து வாக்கை வீணாக்காதீர்கள். மத்தியில் யார் அரசு அமைக்க முடியும் என தெரிந்து வாக்களியுங்கள். நிலையான ஆட்சியை காங்கிரஸ் கட்சி மட்டுமே தரமுடியும்.
இந்துக்களும், இஸ்லாமிய மக்களும் ஒற்றுமையாக வாழும் பகுதியில், மத தீயை கிளப்ப பா.ஜ.க. தயாராகி வருகிறது. ஆனால் அதை அணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான். அந்த கட்சியை தோற்கடிக்கும் வல்லமையும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் தான் உள்ளது. காங்கிரஸ் கட்சியை மக்கள் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.
சிறுபாண்மை மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பு காங்கிரஸ் ஆட்சியில் தான் கிடைக்கும். காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து, பொது சிவில் சட்டம் போன்றவை பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இது யாருக்கு ஆபத்து என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
No comments:
Post a Comment