இரவு விருந்து என்ற பெயரில் பங்களா வீட்டில் போதையில் ஆட்டம்போட்டுள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் 47 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மும்பை லோனவாலா ஹில்ஸ்டேஷன் கோல்டன் வெல்லி பகுதியில் நள்ளிரவில் ரோந்து பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் ஒரு பங்களா வீட்டில் அதிக சத்தத்தில் பாட்டுச்சத்தம் கேட்டுள்ளது. சந்தேகமடைந்த போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.
அங்கு இரவு விருந்து என்ற பெயரில் மது போதையில் ஆடிக்கொண்டு இருந்த 47 கல்லூரி மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து லோனாவாலா போலீசார் கூறுகையில், வீட்டில் இருந்த 47 மாணவர்களையும் கைது செய்துள்ளளோம். இவர்களில் 22 பேர் மாணவிகள். அவர்கள் அனைவரும் அரைகுறை ஆடையில் இருந்தனர்.
மேலும் பெரும்பாலானவர்கள் போதையில் இருந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் அதிகம்பேர், வில்லேபார்லேவில் உள்ள குறிப்பிட்ட தனியார் கல்லூரியை சேர்ந்தவர்கள்.
மேலும் பங்களா வீட்டில் இருந்து மொத்தமாக ஆணுறைகள் மற்றும் மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரின் மீதும் லோனவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
No comments:
Post a Comment