2009ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானன் அட்லாண்டிக் கடலில் விழுந்தது. அதனை கண்டுபிடிக்க 2 ஆண்டுகள் ஆனது. இதனை கண்டுபிடிக்க 54 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
இந்த நிலையில் காணாமல் போன எம்.எச்.370 விமானத்தைத் தேடும் பணிக்கான செலவு வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தியில், மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம், மலேசிய அரசு உண்மைத் தகவல்களை வேண்டுமென்றே மறைத்துவருவதாகக் கூறியுள்ளார். மயமான விமானம் குறித்து அரசு உண்மைத் தகவலைக் கூற வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அமெரிக்க கடற்படையில் இதுவரை 3.6 மில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கி, இடத்தைக் கண்டறியும் பிஞ்சர் லொகேட்டர் நிறுவுதல், கடல் நீரின் அடியில் தேடுதல் வேட்டை, விமான கறுப்புப் பெட்டி கண்டறிதல் உள்ளிட்டவற்றுக்கு 3.3 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாம். இதில், எம்.எச்.370ஐத் தேடப் பயன்படுத்திய விமானங்கள், கப்பல்கள் உள்ளிட்டவற்றின் செலவும் அடங்குமாம்.
No comments:
Post a Comment