புதுச்சேரி: மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளுக்கும் ஆபத்து ஏற்படும் என்றும், மனைவியை மறைத்த மோடி நாட்டை ஆள நேரிட்டால், இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் நாஜிம் எம்.எல்.ஏ.வை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கருணாநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ”இதுவரை தனக்கு திருமணம் ஆனதை அறிவிக்காமல் மறைத்து வந்த மோடி, இன்று தனக்கு திருமணமாகி விட்டது என்றும், தனது மனைவி யார் என்றும் கூறியிருக்கிறார். அவர் தனது மனைவியை மறைக்க என்ன காரணம். இப்படிப்பட்டவர் நமது நாட்டை ஆள நேரிட்டால், இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிவருமோ என தெரியாது. இப்படிப்பட்ட ஒருவர் தென்னகத்தில் உள்ளவர்களை, தமிழகத்தில் உள்ளவர்களை, திராவிடர்களை, புதுச்சேரியில் உள்ளவர்களையெல்லாம் ஆளப் போகிறார் என்றால், அந்த ஆட்சி எப்படி இருக்கும். எனவே, யார் நாட்டை ஆள வேண்டும் என்ற நியாயத் தராசு நம்மடைய கையில்தான் இருக்கிறது. அதன்படி வாக்களியுங்கள். மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு பாபர் மசூதி மட்டுமல்ல, நாட்டிலுள் அனைத்து மசூதிகளுக்கும் ஆபத்து ஏற்படும்” என்றார்.
No comments:
Post a Comment