Latest News

கருத்துக்கணிப்புகளும், ஊடக குழப்பங்களும்…!

கட்டுரையாளர்: ரஹீம் கஸாலி

மக்களின் மனநிலை என்ற பெயரில் ஊடகங்கள் தங்கள் கட்சி விசுவாசத்தை காட்ட ஆரம்பித்து விட்டன. இங்கே இருக்கும் படத்தை பார்த்துவிட்டு  இன்னும் கீழே தொடர்ந்து படிங்க....

இன்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணி இதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்த கருத்து திணிப்புகள்தான் மேலே பார்த்தது. 

அதில்  இந்த கட்சிக்கு இத்தனை சீட் கிடைக்கும், அந்த கட்சிக்கு இத்தனை சீட் கிடைக்கும் என்று ஆளாளுக்கு அடித்து விடுகிறார்கள். தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் அண்ணா. தி.மு.க. அதிக இடங்கள் வருமென்றும், அண்ணா.தி.மு.க-வை பிடிக்காத ஊடகங்கள் தி.மு.க அதிக இடங்கள் வருமென்றும் எழுதி தங்கள் விசுவாசத்தை காட்டி கொள்கிறார்கள்.
சரி...இந்த கருத்துக்கணிப்பெல்லாம் எடுபடுமான்னு பார்த்தால்....
முந்தைய தேர்தல்களில் கருத்து கணிப்புகள் பொய்த்து போய் இருக்கிறது. 

எப்படி எடுக்கப்படுகிறது இந்த கருத்துகணிப்புகள்?

ஒரு நாடாளுமன்றத்தொகுதியில் குறைந்த பட்சமாக பத்து லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவ்வளவு பேரிடமும் எடுக்கப்படுவதில்லை. அது சாத்தியமும் இல்லை.

ஒரு தொகுதியில் அதிக பட்சம் ஆயிரம் பேரிடம் மட்டுமே எடுக்கப்படுகிறது. கருத்துக்கனிப்புகளுக்காக ஊடகங்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் போகும்போது...வாக்காளர்கள் தி.மு.க அபிமானிஎன்றோ....அண்ணா தி.மு.க அபிமானிஎன்றோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. தி.மு.க வின் ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால் அவர் தி.மு.க-தான் அதிக இடம்  வருமென்றும், அண்ணா.தி.மு.க-ஆதரவாளரிடம் கேட்கப்பட்டால்  அண்ணா.தி.மு.க  அதிக இடங்கள் வரும் என்றும் சொல்வார்கள்.

அப்படி எடுக்கப்பட்ட கணிப்பை இவர்களும் தத்தம் பத்திரிகைகளில் வெளியிட்டு விடுவார்கள்.தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு சாதகமாக கூட ஊடங்கங்கள் கணிப்பை மாற்றி விடுவார்கள்.  

இது சரிதானா?

பத்து லட்சம் வாக்காளர்களின் மனநிலையை வெறும் ஆயிரம் பேர் மட்டும் எப்படி தீர்மானிக்க முடியும்? அல்லது பிரதிபலிக்க முடியும்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வார்த்தை பிரயோகத்தை நாம் இங்கே பயன்படுத்த முடியாது. சோறு என்பது ஒரே தண்ணீரில் ஒரே வெப்பத்தில், ஒரே கொதிநிலையில் சீராக வேகக்கூடியது.

ஆனால் மக்கள்?

ஒரே தெருவில் இருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையை கூட நம்மால் கணிக்க முடியாது.  வேட்பாளர், ஜாதி, இலவசங்கள், பணம், கடைசி நேர பிரச்சார வியூகங்கள் மூலம் கூட மக்களின் மன நிலை மாறிவிடும்.    முன்பு ஊடகங்களில்  இந்த கட்சிக்குத்தான் என் வாக்கு என்று சொன்னவர்கள் கூட மாற்றி வாக்களித்து விடுவார்கள். எனவே, இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள கூடாது. 

கருத்து கணிப்பினால் சாதக பாதகங்களும் இருக்கத்தான் செய்கிறது. எப்படி என்று பார்த்தால்......

இந்த தொகுதியில் இந்த கட்சி ஜெயிக்கும் என்று ஒரு கருத்து கணிப்பு வந்தால்....கருத்துக்கணிப்புபடி ஜெயிப்பதாக கூறப்பட்ட  கட்சியினர்  நாம்தானே ஜெயிக்கப்போகிறோம் என்று களப்பணியில் மெத்தனமாக இருப்பதற்கும் வாய்ப்புண்டு.... தோற்க்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் சோர்ந்து போகவும் வாய்ப்புண்டு. 

அல்லது தோற்கப்போவதாக கூறப்பட்ட கட்சியினர் இன்னும் உத்வேகத்துடன் செயல்பட்டு களப்பணியாற்றி ஜெயிக்கவும் வாய்ப்புண்டு...

அடுத்து மக்கள்.....கருத்து கணிப்பை உண்மையென நம்பி மக்களும் மனசு மாறும் சாத்தியமுண்டு....நம்ம தொகுதியில் இந்த கட்சிதானே ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு சொல்லியிருக்கிறது. நாமும் அந்த கட்சிக்கே வாக்களிப்போம்.எதற்காக தோற்கும் கட்சிக்கு வாக்களித்து நம் ஓட்டை வீணாக்குவானேன் என்று மாறவும் வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் கருத்து கணிப்பை நம்பாதீர்கள் என்று கட்சிகள் அலறுகிறது.

மக்களின் இந்த மனநிலையை கெட்டியாக பிடித்து கொண்ட ஊடகங்கள் தங்களுக்கு பிடித்த கட்சியினர் ஜெயிக்க கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை செவ்வனே செய்து வருகிறார்கள். ஒருவேளை இவர்களின் கணிப்பு மாறிவிட்டால்....இலவசங்கள், பணம் அதிகமாக கொடுத்த கட்சி வென்று விட்டது. நாங்கள் வேட்பாளர், இலவசங்களை அறிவிக்கும்  முன்பே கருத்து கணிப்பு எடுத்து விட்டதால் எங்கள் கணிப்பு மாறிவிட்டது என்ற ரீதியில் ஒரு அறிக்கை விட்டு மீசையில் மண் ஒட்டாமல் பார்த்து கொள்வார்கள்...ஒருவேளை இவர்களின் கணிப்பு தப்பி தவறி சரியாக இருந்துவிட்டால்...சொல்லவே வேணாம் அடுத்த தேர்தல் வரை இந்த  விளம்பரத்தை வைத்தே ஓட்டிவிடுவார்கள்.

ஆகவே, கருத்து கணிப்பை நம்பாமல் நமக்கு நல்லது செய்பவர்கள் யாரென்று பார்த்து வாக்களிக்க வேண்டும்.அந்த வேட்பாளர் சுயேட்சையாக இருந்தாலும் கூட.....
கட்டுரையாளர் வலைத்தளம்: http://www.rahimgazzali.com/

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.