கடந்த 20 ஆண்டுகளில் 15 வயது முதல் 17 வயது உடைய இளம் பெண்கள் குழந்தை பெற்று கொள்வது அமெரிக்காவில் குறைந்து உள்ளது.ஆனால் இன்னும் வாரத்திற்கு 1700 இளம் பெண்கள் தாய்மை அடைவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்து உள்ளது. சட்டப்பூர்வமாக வயதுக்கு வராத இளம்பெண்கள் தாய்மை அடைவது கவலை கொள்ளவைத்து உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. இளம் வயதில் தாய்மை அடைபவர்கள் மிகவும் தரம் குறைந்த மருத்துவத்தை நாடுகின்றனர். இதனால் சமூக பொருளாதார விளைவுகள் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இளம் வயதினர் கர்ப்பம் அடைவது குறைந்து உள்ளது என்றாலும். இன்னும் இளம் வயதினர் குழந்தைகளுக்கு தாயாகி வருவது குறைவது இல்லை என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் டாம் பிரிடன் தெரிவித்து உள்ளார்.
2012 இல் 15 வயது முதல் 17 வயதுக்குட்ட இளம் பெண்கள் 86427 பேர் குழந்தை பெற்று உள்ளனர்.இது 15 முதல் 19 வயது உடைய பெண்களின் பிறப்பு விகிதத்தில் 28 சதவீதமாகும்
ஹிஸ்பானிக், ஹிஸ்பானிக் அல்லாத, கருப்பு இன பெண்அள் அமெரிக்க இந்தியர் மற்றும் அலாஸ்கா ஆகிய இனத்திலேயே இளம் வயதில் குழந்தை பெற்று கொள்வது அதிக அளவில் உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment