மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் திடீரென முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தார். மதுரையில் அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசினார். இந்தக் கூட்டத்தின் முடிவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தம்பி ஏ. பால்ராஜ், அவருடைய மனைவி வெங்கடலட்சுமி, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்பு செழியன் உள்ளிட்ட 3 ஆயிரத்து 770 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் சகோதரர் பால்ராஜ், மனைவி வெங்கடலெட்சுமி ஆகியோர் நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தேமுதிக எம்.எல்.ஏக்கள் 8 பேர் அதிமுகவுக்கு ஆதரவாக மாறிய நிலையில் அக்கட்சித் தலைவர் விஜயகாந்தின் சகோதரரே மதுரையில் அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment