கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.
இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 இந்தியர்கள் பயணம் செய்ததாக மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது, விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.
No comments:
Post a Comment