வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதென முடிவு எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நெல்லை, ராமநாதபுரம், வடசென்னை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, நெல்லை தொகுதிக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அறிவிக்கப்பட்டார்.
ராமநாதபுரம் தொகுதிக்கு மாவட்ட தலைவர் ஜியாவூதீனும், வடசென்னை தொகுதிக்கு மாநில பொதுச் செயலாளர் நிஜாம்முகைதீனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று நடைபெறும் கட்சியின் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 36 தொகுதிகளில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து செயற்குழுவை கூட்டி அறிவிக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment