தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணியிடங்களுக்கு ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை (மார்ச் 17) வெளியிட்ட அறிவிக்கை:
கிராக நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு ஜூன் 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
கல்வி தகுதி:
வி.ஏ.ஓ. தேர்வினை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், போதுமான தமிழறிவும் பெற்றிருப்பது அவசியமாகும்.
வயது:
வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
கூடுதல் தகவல்:
அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வில் வெற்றிபெற்றாலே வி.ஏ.ஓ. வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
கேள்விகள் எப்படி இடம் பெறும்?:
வி.ஏ.ஓ. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறும். இவற்றுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வில் தகுதி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் பெற வேண்டும். பொது அறிவுப் பிரிவில் 75 வினாக்களும், கிராம நிர்வாக நடைமுறைகளில் 25 கேள்விகளும், திறனறிவுத் தேர்வில் 20 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 கேள்விகளும் கேட்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் அவர்கள் அளிக்கும் மாவட்டங்களின் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள், இணையதளம் (www.tnpscexam.net) மற்றும் (www.tnpsc.gov.in) வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எப்போதும் பயன்பாட்டு நிலையில் வைத்திருக்க வேண்டும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, சான்றிதழ் சரிபார்த்தலில் பங்கேற்பதற்கான அழைப்பு மற்றும் பிற குறிப்புகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களால் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்ப நிலை தொடர்பாக, குறுஞ்செய்திகளைப் பெற விரும்புவோர் தங்களது செல்போன் எண்ணை விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
நன்றி: கல்விச்சோலை
தகவல்:
அன்புடன் ஹைதர் உசேன்
+91-91766 33023
No comments:
Post a Comment