பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அதில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் உள்பட 20 பேர் பெயர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன.உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை எதிர்த்து டெல்லியை சேர்ந்த ஷாஜியா இல்மி என்ற பெண் வேட்பாளரை நிறுத்துவது குறித்து அந்த கட்சி பரிசீலனை செய்து வருகிறது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் ஆர்.கே.புரம் தொகுதியில் போட்டியிட்ட அவர், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர் ஆவார்.
பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, குஜராத்துக்கு வெளியே மற்ற மாநிலங்களில் இருந்து போட்டியிட்டால் அவரை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவாலை நிறுத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய்சிங்கிடம் அது பற்றி கேட்டதற்கு, நரேந்திரமோடி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவித்தபிறகு அது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
No comments:
Post a Comment