ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் கருணை மனு மீது முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது அதில், “இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு அளவுக்கு அதிகமான தாமதம் எதையும் செய்யவில்லை. இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இதுவரை தங்கள் செயலுக்காக சிறிதும் வருந்தவில்லை என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து இதுகுறித்து இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து . தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது
No comments:
Post a Comment