வருமான வரித் துறை முதன்மை ஆணையர் எஸ்.ரவி புதிய இணையதளத்தை (www.tnincometax.gov.in) தொடங்கிவைத்தார். இந்த இணையதளத்தை வருமானவரி துறை அதிகாரி கிருபாகரன் வடிவமைத்துள்ளார். இந்த இணையத்தளத்தில் சென்னை மற்றும் புதுச்சேரி மண்டலங்களுக்கான செய்திகள் இடம்பெறும்.
மேலும் அனைத்து உத்தரவுகள், சுற்றறிக்கைகள், பயிற்சி வகுப்புகள், செய்திகள், நடப்புகள், வருமான வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களும் அடங்கியுள்ளன. வருமானவரி தொடர்பான சலுகைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. மேலும் இந்த இணையதளம் தலைமையிட இணையதளத்தில் உள்ள தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் டெண்டர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வருமானவரி துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இன்னும் ஒரு வாரத்தில் முழு வீச்சில் செயல்படும் என்று வருமான வரித் துறை அறிவித்துள்ளது
No comments:
Post a Comment