15வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. பிரதமரின் உருக்கமான பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே பேசிய போது, தெலுங்கானா மசோதா, நிறைவேற உதவிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜை புகழ்ந்து தள்ளினார்.
பதிலுக்கு சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் தலைவர்களுக்கு புகழாரம் சூட்டினார். சோனியா பிரதமரானால், தலையை மொட்டையடித்துக் கொள்வேன் என்று ஒரு காலத்தில் சொன்ன சுஷ்மா, நேற்றைய மக்களவையில், சோனியா பெருந்தன்மையான தலைவர் என்று மனதார பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய சுஷ்மா, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி ஒரு நியாயவாதி, என்று கூறிய போது அத்வானியால் தன்னுயை உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தார்.
அவை உறுப்பினர்கள் பசுமை நிறைந்த நினைவுகளோடு வாழ்த்துக்களை கூறி விடைபெற்றனர்.
வழக்கமாக கூச்சல் குழப்பமாக அமளி துமளிப் படும் லோக்சபா நேற்றைய தினம் கடைசி நேரத்தில் அமைதிப் பூங்காவாக காட்சியளித்தது.
No comments:
Post a Comment