நேற்று மாலை அதிரையின் வறண்ட குளங்களுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அதிரையின் குளங்களுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கின்றன.
சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள மரைக்கா குளம், தண்ணீர் முழுமையாக நிரம்பாமல் உள்ள செக்கடி குளம் ஆகியவற்றிற்கு சென்று கொண்டிருக்கின்றன. இதனால் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
இன்று காலை அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் துணைதலைவர் ஹாஜி M.S. ஷிஹாப்புதீன், தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் துணைதலைவர் P.M.K தாஜுதீன், செயலாளர் ஜஃபருல்லா மற்றும் அதிமுக கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நலபிரிவின் செயலாளருமாகிய அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் தண்ணீர் வரத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த தண்ணீர் வரத்து தொடர்ந்து சில நாட்களுக்கு வரத்தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள ஒவ்வொரு குளங்களுக்கும் ஒன்றபின் ஒன்றாக தண்ணீர் நிரப்பப்படும் என தெரிகிறது. வாய்க்காலில் உடைப்பு - அடைப்பு ஏற்படாதவாறு ஆங்காங்கே இளைஞர்கள் பலர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment