அமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கலிபோர்னியா மாகாணத்தின் புறநகர்ப் பகுதியான சாண்டா ஆனாவில் வில்லியம் புச்மன் என்னும் ஆசிரியர் வசித்து வந்தார். இவருக்கு வயது 53.
பாம்புகள் வளர்ப்பதில் அதீத ஆர்வமுடைய இவர், தனது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகளை வளர்த்துவந்தார். இவற்றிற்கு உணவாக அவர் அடிக்கடி வீட்டிற்கு அதிக அளவில் எலிகளை கொண்டுவருவதை அக்கம்பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது வீட்டை காவல்துறையினர் சோதனையிடச் சென்றனர். அப்போது, ஐந்து அறைகள் கொண்ட புச்மனின் வீட்டை பார்த்த காவல்துறையினர் அதிர்ச்சியில் உறைந்தே போயினர்.
அங்கு அவர்கள் நூற்றுகணக்கான மலைப்பாம்புகள் நான்கு அறைகள் முழுவதும் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர்.
இந்த 400க்கும் மேற்பட்ட பாம்புகளில் வெறும் 2 மட்டுமே உயிரோடு இருந்தன. மற்றவை அனைத்தும் உணவில்லாமல் இறந்திருந்தன.
இந்த பாம்புகளை வளர்த்துவந்த ஆசிரியர், அவற்றிற்கு உணவளிக்க முடியாமல் விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, வில்லியம் புச்மன் கைது செய்யப்பட்டு காவல்துறையின் கண்காணிப்பில் உள்ளார்.
No comments:
Post a Comment