Latest News

இந்திய ஹஜ் குழு - இவ்வாண்டிற்கான (2014; ஹிஜ்ரி 1435) ஹஜ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

பிப்ரவரி 1, 2014 முதல் ஹஜ் விண்ணப்பம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் 2014 க்கான விண்ணப்பமும், வழிமுறைகளும் ஒரே புத்தகமாக வெளியிடப்படுகிறது என இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

வழிமுறைகள் மற்றும் ஹஜ் பயண விண்ணப்பம் அடங்கிய புத்தகம் - மாநிலங்களில் உள்ள ஹஜ் குழு அலுவலங்களில் இலவசமாக வழங்கப்படும். மேலும் அவைகளை இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.com லும் பதிவிறக்கம் செய்யலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் - மாநிலங்களில் உள்ள ஹஜ் குழு அலுவலகங்களில் மார்ச் 15, 2014 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இந்திய ஹஜ் குழு மூலம் ஒருவர், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம். தவறான தகவல் வழங்கி ஹஜ் பயணம் மேற்கொள்ள இடம்பெற்றவர்களின் பயணம், தவறு கண்டறியப்பட்டால், விமானம் ஏறும் நேரத்தில் கூட - ரத்து செய்யப்படலாம். அவர்கள் செலுத்திய மொத்த தொகையையும் அவர்கள் இழக்க நேரிடும்.

மார்ச் 15, 2014 க்கு முன்னர் வழங்கப்பட்ட பாஸ்போர்ட் - விண்ணப்பதாரரிடம் இருக்க வேண்டும். மேலும் மார்ச் 31, 2015 வரை செல்லுப்படியாகும் பாஸ்போர்ட்டாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் - IFS குறியீடு வழங்கும் வங்கியில் கணக்கு வைத்துள்ள விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தகுதியுள்ள நபர்களே விண்ணப்பம் செய்யவேண்டும்.

விண்ணப்ப புத்தகத்தில் உள்ள வடிவில், விண்ணப்பதாரர்கள் - விதிமுறைகளுக்கு உட்பட்டே விண்ணப்பம் நிரப்பட்டுள்ளது என சுயமாக உறுதி செய்யப்பட்ட (SELF-ATTESTED) சாற்றுரை (DECLARATION) வழங்கவேண்டும்.

ஒவ்வொரு பயணியும் - 22 கிலோ கிராமுக்கு மிகாத, நீளம் + அகலம் + உயரம் = 158 சென்டி மீட்டருக்கு கூடாத, இரு பெட்டிகள் (2 * 22 கிலோ கிராம்), சரக்கிடு சுமையாக (Checked-in Baggagae) கொண்டு செல்லலாம்.

மேலும் - ஒவ்வொரு பயணியும் - 10 கிலோ கிராமுக்கு மிகாத, நீளம்=55 cm + அகலம்=40 cm + உயரம்=23 cm கூடாத, ஒரு பெட்டி, கை சுமையாக (Hand Baggage) கொண்டு செல்லலாம்.

மக்காவில் இரு வகையான தங்கும் வசதிகள் வழங்கப்படும் (பச்சை, அசீசியா). ஹரம் சரீஃபின் எல்லையில் இருந்து (கானா -இ- காபா வில் இருந்து அல்ல), 1500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காக பச்சை வகை தங்கும் இடங்களின் கட்டணம் கூடுதலாக இருக்கும்.

போக்குவரத்து வசதி - அசீசியா பிரிவு பயணியருக்கு மட்டும் வழங்கப்படும், பச்சை பிரிவு பயணியருக்கு அல்ல.

பிற விசயங்களில் - அனைத்து பிரிவு பயணியரும் ஒரே வகையான சலுகைகளை பெறுவர்.

தகவல்: இந்திய ஹஜ் குழு


No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.