Latest News

அதிக நேரம் கணினியில் செலவிடுகிறீர்களா? உஷார்!!

கண் பாதிப்பு:

இமைக்காமல் அதிக நேரம் கணினித் திரையயே பார்த்துக் கொண்டிருப்பது கண் அழுத்தம்(glaucoma), மற்றும் விழி உலர்வு நோய்(dry eye syndrome) க்கு காரணமாகிறது. குறிப்பாக கிட்டப் பார்வை (short sight) உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது.

அதிக வெளிச்சமான திரையை அதிக நேரம் உற்றுப் பார்ப்பது கண்களை மிகவும் பாதிக்கிறது. இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் ஆபத்தை மெல்ல நாம் உணருமுன் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி இதெல்லாம் இதன் முன்னெச்சரிக்கை.

கணினி திரை வெளிச்சத்தை மிதமாக வைத்துக்கொள்ளவும்.

        கணினி இருக்கும் அறையில் ஓரளவு வெளிச்சம் இருக்க வேண்டும்.

அடிக்கடி கண்ணை இமைப்பது நல்லது.

இடையிடையே கண்ணை முழுவதுமாக மூடி கண்ணுக்கு சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும்.

அடிக்கடி திரையிலிருந்து பார்வையை விலக்கி தூர உள்ள பொருளை காட்சியைப் பார்க்க வேண்டும்.

மானிட்டருக்கு பின் புறம் ஜன்னல் இருந்தால் நல்லது.

குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ள உலர்ந்த குளிர் காற்று கண் உலர்வுக்குக் காரணமாகும்.

கை மற்றும் மணிக்கட்டு பாதிப்பு:

எப்போதும் கீ போர்டில் தட்டிக் கொண்டிருப்பதும், மவுசை கிளிக்கிக் கொண்டிருப்பதும் விரல்கள், மணிக்கட்டு ஆகியவற்றில் வலி ஏற்படுத்துகிறது.  இது RSI (Repetitive Strain Injury) எனப்படுகிறது. இது வெறும் வலி என்று அலட்சியப்படுத்தாதீர்கள். கைகளில் மின்சாரம் தாக்கினால் என்ன பாதிப்பு உண்டாகுமோ அந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

ஒரு சிறிய துண்டு துணி அல்லது பஞ்சு போன்ற பொருளை மணிக்கட்டு சப்போர்ட்டாக வைத்துக் கொண்டு மவுசில் வேலை செய்யுங்கள். இதற்கென்றே தயாரிக்கப்பட்ட மவுஸ் பேட்களும் கிடைக்கின்றன.  கைகளும் கீ போர்டும் சரியான தூரத்தில் சரியான உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் கைக்கு அதிக ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்கும்.

கழுத்துவலி:

மானிட்டரைப் பார்க்கும் போது நேராகப் பார்க்கும் நிலையில் இருக்கை உயரம் இருக்க வேண்டும். கழுத்தை திருப்பி ஒரு பக்கமாகவோ அண்ணாந்தோ, குனிந்தோ பார்ப்பது கழுத்து வலியையும் நாளடைவில் எலும்புத் தேய்வுகளையும் ஏற்படுத்தும்.

முதுகு வலி:

நல்ல வசதியான இருக்கை, சரியான உயரத்தில் இருக்க வேண்டும். முதுகை வளைக்காமலும் திரும்பாமலும் நேராக உட்கார்ந்திருக்க வேண்டும். தவறான பொசிசனின் உட்கார்ந்திருப்பது, கை கால்களுக்கு செல்லும் சரியான இரத்த ஓட்டத்தை பாதிக்கும். வலி, எலும்புகள் தேய்வுண்டாகும்.

சமூக பாதிப்பு:

எந்நேரமும் கணினியிலேயே நேரத்தை செலவிட்டால் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் போன்ற நம்மைச் சார்ந்தவர்களிடம் செலவிட நேரம் கிடைப்பதில்லை. இது அவர்களை நம்மிடமிருந்து பிரித்து பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும்.

தினசரி கொஞ்ச நேரமாவது முற்றிலும் கணினியை மறந்து நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்காக ஒதுக்க வேண்டும்.

அதிக கொலெஸ்ட்ரால் ஆபத்து:

எப்போதும் கணினி முன்னே உட்கார்ந்தே இருப்பதால் உடலில் எரிக்கப்படும் கலோரி அளவு உண்ணும் உணவை விட குறைவாக இருக்கும். இதனால் இரத்ததில் சேரும் அதிகப்படியான கொழுப்பு சத்து கொலெஸ்ட்ராலாக இரத்தக் குழாய்களில் படிகிறது. இது நாளடைவில் இரத்தக் குழாய்களைக் குறுகச் செய்து உயர் இரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. அதோடு இதய நோய், சர்கரை நோய் எல்லாம் உருவாகி ஆயுளுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடும்.

தொடர்ந்து கணினியில் இருக்காமல் இடையிடையே எழுந்து சென்று சில தூரம் நடைப் பயிற்சி கொள்வது  மிகவும்  நல்ல  பழக்கம்.  தொடர்ந்து பணிபுரியத் தேவையான புத்துணர்வு இது தரும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.