கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ கேமராமேன், துபாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கேமராவை திருடி சென்ற போது வசமாக சிக்கிக் கொண்டார். அண்மையில், தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்சே துபாய் வழியாக கொழும்பு திரும்பினார். துபாய் விமான நிலையத்தில் மகிந்த ராஜபக்சே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவரது குழுவில் இடம்பெற்றிருந்த கேமரா மேன் ஒருவர் ரூ 3 இலட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை டூட்டி ஃப்ரீ ஷாப் ஒன்றில் இருந்து திருடியுள்ளார்.
திருடிய அந்த சிசிடிவி கேமராவை தமது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓட போது அதனை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் நடத்தப்பட விசாரணைகளின் போது இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் குழுவில் இடம்பெற்றிருந்தவர் என்று விவரம் தெரியவந்தது. இதனால் அந்த கேமராமேனை எச்சரித்து விடுவித்தனராம். ராஜபக்சே கொழும்பு திரும்பியதும் அந்த திருட்டு கேமராமேன் டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டாராம்.
நன்றி : ஒன் இந்தியா
No comments:
Post a Comment