ஈரோடு : தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டக்கல்லூரி மாணவி நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் உண்ணாவிரதத்துடனே கோட நாட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இவர்களது பயணத்தை தடுத்து நிறுத்திய ஈரோடு காவல்துறையினர், அவர்களை இன்று மதியம் 2:30 மணி அளவில் கைது செய்து பெருந்துறை அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறையினர் அவர்களை வற்புறுத்துவதாகத் தெரிகிறது. மேலும், பிறரை தொடர்பு கொள்ள இயலா வண்ணம் அவர்களது கைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் நந்தினியின் சகோதரி நிரஞ்சனா தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசாங்கம் தெளிவான ஒரு முடிவை அறிவிக்காவிட்டால், தானும் உண்ணாவிரதம்
Thanks: www.inneram.com
No comments:
Post a Comment