சென்னை ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் 6 அடுக்குகளை கொண்ட புதிய தலைமை செயலகம் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக மாற்றம் செய்யப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத மருத்துவ சேவைகளை இங்கு பெறக்கூடிய வகையில் பல் நோக்கு ஆஸ்பத்திரியாக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்
.
அலுவலக நோக்கத்திற்காக கட்டப்பட்ட இக்கட்டிடத்தை முற்றிலும் மருத்துவ சேவைக்காக மாற்றி அமைக்கப்படுகிறது.
நோயாளிகள் பயன் பாட்டிற்கு 212 தனித்தனி கழிவறைகள் தற்போது மாற்றி கட்டப்பட்டுள்ளன. அதற்கான பைப்புகள் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் 16 லிப்ட் வசதிகள் உள்ளன.
அதனை ஸ்டெச்சர், நோயாளிகளை படுக்கையுடன் கொண்டு செல்ல வசதியாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரமான காற்று, லிப்டில் கிடைப்பதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
6 மாடிகளுக்கும் பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக சாய்தளம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 4 தளத்திற்கு செல்வதற்காக சாய்தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் இரண்டு பக்கமும் இந்த வசதிகள் அமைக்கப்படுகிறது.
‘‘500 படுக்கைகள் கொண்ட அறைகளாகவும், டாக்டர்கள் அறை, கூட்டரங்குகள் போன்றவை தனித்தியாக பிரித்து மாற்றி அமைக்கப்படுகிறது. 9 மருத்துவ துறையின் கீழ் இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
மிகப்பெரிய அளவில் 10 ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் பலருக்கு ஆபஷேன் செய்யக் கூடிய வகையில் விசாலமாக அறுவை சிகிச்சை அரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் நோயாளிகள் பயன் படுத்தப்படும் துணிகள், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை சுத்தம் செய்ய மிகப் பெரிய சலவையகம் கட்டப்பட்டுள்ளது. ரூ.27 கோடி செலவில் இந்த பணிகளை பொதுப் பணித்துறை செய்து வருகிறது.
மருத்துவமனையாக மாற்றும் பணி 90 சதவீதம் முடிந்து விட்டன. மீதமுள்ள பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிந்து விடும். டிசம்பர் 31–ந்தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்படும் என்று பொதுப் பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவமனைக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முதல் கட்டமாக ரூ. 76 கோடிக்கு கருவிகள் வாங்கப்படுகிறது.
அதிநவீன சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.ஆர்ம் உள்ளிட்ட உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
டிஜிட்டல் எக்ஸ்ரே, கருவிகள், நோயின் தன்மையை கண்டறிய கூடிய நவீன கருவிகள் இந்த மருத்துவமனைக்கு வாங்கப்படுகிறது. மாற்றி அமைக்கும் பணிகள் டிசம்பரில் நிறைவு பெற்றவுடன் ஜனவரி மாதத்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் பொறுத்தும் பணி தொடங்குகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வி.விஜயபாஸ்கர் கூறுகையில், தலைமை செயலகத்தை பலநோக்கு மருத்துவமனையாக மாற்றும் பொதுப் பணித்துறை பணிகள் டிசம்பரில் முடிகிறது.
இந்த மருத்துவமனையை உலகத் தரத்தில் அமைக்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் விரும்புகிறார். அதனால் மருத்துவ உலகில் நவீன கருவிகளை நாங்கள் வாங்குகிறோம். பொதுப்பணித்துறை பணிகள் முடிந்தவுடன் என்று நவீன கருவிகளை பொறுத்துவதற்கு ஒன்று அல்லது 2 மாதம் தேவைப்படும் என்றார்.
எனவே பிப்ரவரி மாதம் இறுதி அல்லது மார்ச் மாதத்தில் உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு மருத்துவமனை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment