ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு
முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும், டெல்லியில் வரும் 4ம் தேதியும் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல் முடிவுகளை
உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம்
முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுன்ட்
உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பேஸ்புக் வாடிக்கை
யாளர்களாக உள்ளனர். டுவிட்டருக்கு 8 கோடி மக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின்
பேஸ்புக் பக்கத்துக்கு 130 வாடிக்கையாளர்களும், டுவிட்டருக்கு 120 வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
இதையடுத்து பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இதுவரை முக்கிய செய்திகள் எதையும்
தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் இருப்பதாக
ஆணையம கருதி வந்தது
இந்நிலையில் இபொது நடக்கும் தேர்தல் முடிவுகளை பொதுமக்கள்
விரைவாக அறிந்து கொள்ளும் வகையில் ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ இணையதளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி குறிப்பிட்ட தொகுதியின் தேர்தல் முடிவுகள் மற்றும்
வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் குறித்த அனைத்து விவரங்களும் தேர்தல் ஆணையத்துக்கு
சொந்தமான ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ வலைதளத்தில் முதன்முறையாக வெளியிடப்படும் தெரிக்கிறது.
No comments:
Post a Comment