புனேயில் உள்ள ஹதப்சர் என்ற
இடத்தில் யாரோ ‘பாபா’ நமக்கு உணவு அளிப்பார் என்று கூறி மாதக்கணக்கில் மனைவியை மூடநம்பிக்கைக்
கணவன் பட்டினி போட்டுள்ளார்.
இந்தக் கொடூர, அறிவுகெட்ட கணவனின் பெயர் ராம்நாத்
தேஷ்முக் (55) மனைவி பெயர் கமுதினி (50)
இதனால் உடல் நலம் மிகவும்
மோசமடைந்த அந்தப் பெண்மணி கால்கள் வீக்கத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அகமது நகரில் உள்ள மிரவல்லி
பாபாதான் இந்த மூடநம்பிக்கை கணவனுக்கு ஆதர்சமாம்! இவர்தான் சோறு போடுவார் என்று மனைவியை
பட்டினி போட்டுள்ளார்.
இந்தக் குடும்பத்தின் கதை
வயிற்றைக் கலக்கும் ஒன்று.இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள். மகள் சில ஆண்டுகளுக்கு
முன்பு தற்கொலை செய்துகொண்டார். இரண்டு மகன்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், சகோதரி தற்கொலைக்குப் பிறகு மனநலம்
பாதிக்கப்பட்ட இந்த இரண்டு ஆண் மகன்களும் எங்கு சென்றார்கள் என்பது இன்று வரை மர்மமாக
உள்ளது.
பசியால் வாடிய கமுதினி ஒருநாள்
குப்பைத் தொட்டியில் இருப்பதை சாப்பிட்டதாக அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளிடமும் மிகவும்
கொடூரமாக நடந்து கொண்டுள்ளார் அறிவு கெட்ட மூடநம்பிக்கை பிடித்த தந்தை
No comments:
Post a Comment