விஷத்தன்மை நிறைந்தவர்கள் பாஜகவினர் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வர்ணித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும் போது, விஷ மனிதர்கள் நிரம்பிய கட்சி பாஜக. அவர்கள் பொய்களையும், வதந்திகளையும் தவிர வேறு எதையும் பரப்புவதில்லை.
ராஜஸ்தான் அரசிந் இலவச மருத்துவத் திட்டம் குறித்து பொய்யான தகவல்களை அவர்கள் பரப்பி வருகிறார்கள். இந்த மருந்துகள் விஷத்தன்மை கொண்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் விஷத்தன்மை நிறைந்தவர்கள் பாஜகவினர்தான்.
பொய்களை உண்மை போல பேசுகிறார்கள் பாஜகவினர். ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற வெறிதான் இதற்குக் காரணம்.
ராஜஸ்தான் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்க்க மறுக்கிறது பாஜக. மாறாக இருளை மட்டுமே பார்க்கிறது என்றார் சோனியா.
எதிர்வரும் டிசம்பர் 1 ந் தேதி ராஜஸ்தான் சட்டசபைக்கு பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நன்றி : http://indru.todayindia.info/
No comments:
Post a Comment