Latest News

உள்ளங்களை உலுக்கிய மனங்களின் சாட்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

கண்கவரும் பொருட்காட்சி, கண்காட்சி என எத்தனையோ கண்டுகளித்திருப்போம் ஆனால் இதற்கு மாற்றாக உள்ளங்களால் உணர்ந்து பார்ப்பதற்காக கடந்த நவம்பர் 2013, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் துபை ஜமியத்துல் இஸ்லாஹ் அரங்கில் 'இஸ்லாத்தை ஏற்க 100க்கு மேற்பட்ட காரணங்கள்' என்ற பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்துக்காட்சி, குறிப்பாக துபை மாநகரில் இஸ்லாத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் தழுவிய சகோதர, சகோதரிகளின் உள்ளத்து உணர்வுகள் காட்சியாய் ஏற்பாடு செய்யப்பட்டு காண்போரின் மனசாட்சியை உலுக்கும் நிறைவான நிகழ்வாய் அமைந்திருந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
 
துபை மாநகரில் உயர்பதவிகள், தொழிலாளர்கள் என பல மட்டங்களிலும் பணிபுரிந்த, பணியாற்றுகின்ற நூற்றுக்கணக்கான சகோதர, சகோதரிகள் தங்களின் வாழ்வியலாக இஸ்லாம் எனும் பொக்கிஷம் கிடைத்த தருணங்களை, காரணங்களை, விவரித்த விடயங்களை இரத்தினச்சுருக்கமாக தொகுத்து, எளிய ஆங்கிலத்தில், கருத்துக்களையே காட்சிகளாக்கி அழகுற பேனர் வடிவில் வரிசைபடுத்தியிருந்தனர்.
 
இரு தினங்களும் நிறைந்த அரங்கமாக, ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும், தஃவா பணியாளர்களும், மொழி, நாடு, நிறம், பேதமின்றி சர்வதேச மக்களும் திரளாக கலந்து பயன்பெற்றுச் சென்றனர்.
 
அரங்கில் பம்பரமாக சுழன்ற இறை மார்க்கத் தொண்டர்களில் அனேகர் பெண்களே! அதிலும் இஸ்லாத்தை ஏற்ற புதிய சொந்தங்களே வழிகாட்டி, வந்தோருக்கு விளக்கி உவந்தனர். அரபி, ஆங்கிலம், தகலோக் என சர்வதேச மொழிகள் பலவற்றுடன் ஹிந்தி, மலையாளத்துடன் நம் தமிழிலும் விளக்கமளித்தனர்.

துபை அவ்காஃப் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்விலும் 3 பேர் இஸ்லாத்தை தங்களின் வாழிவியல் நெறியாக ஏற்றனர், அல்லாஹூ அக்பர்.
 
பேரதிர்ச்சி தரும் உண்மை
 
பொதுவாக, இன்றைய முஸ்லீம்களின் நடவடிக்கைகளை பார்க்கும் ஒருவன் ஒருபோதும் இஸ்லாத்திற்கு வரமாட்டான் என்ற அவச்சொல் நிலவுவதை யாவரும் அறிவோம் என்றாலும் இங்கே பலரும் இஸ்லாத்தை தழுவுவதற்கு சில முஸ்லீம்களின் தூய இஸ்லாமிய செயற்பாடுகளேகாரணமாக அமைந்ததென சான்று பகர்ந்துள்ளனர் நமைமிகைத்த நம்மின் புதிய சகோதர, சகோதரிகள். அப்படியாயின் நம்முடைய வாழ்க்கை???
 
அதிரைஅமீன்
 
 

























 











No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.