Latest News

கரும்புள்ளிகளை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதற்கேற்ப நாம் ஒவ்வொருவரும் நமது முகத்தை அழகாக வைத்துக் கொள்ளவே ஆசைப்படுகின்றோம். இன்று பல அழகு நிலையங்கள் வந்த போதிலும்அவற்றில் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. அதனால்நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும்நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம்.

அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும். ஆகவே வரும் முன் காப்போம்’ என்னும் பழமொழிக்கேற்பஅவை பருக்களாக மாறும் முன்சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால்நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடுசருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். இப்போது இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினால்கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல்அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

சர்க்கரை
ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து,அதனை மூக்கிலும் கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவினால்அவை குறையக்கூடும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

தயிர்
2 மேஜை கரண்டி தயிருடன்2 மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் 2 மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி 10 நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும்

ஆலிவ் ஆயில்
சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன்எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால்அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது சில நிமிடங்கள் தடவி காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

ஆயில் மசாஜ்
ஆலிவ் எண்ணெயை கொண்டு முகத்தை அடிக்கடி மசாஜ் செய்து வரவும். இது கரும்புள்ளிகள் வராமல் தடுக்க உதவும். அதனால்,முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவி கரும்புள்ளிகள் வராமல் தடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முகத்தில் ஆலிவ் எண்ணெயை தடவிசூடான நீரில் நனைத்த துணியை முகத்தில் மூடி 15 நிமிடங்கள் காய வைக்கவும். இதனால் இந்த வெதுவெதுப்பான துணி சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கிகரும்புள்ளிகளை தளர்வடையச் செய்யும்.

ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை தினமும் சுத்தம் செய்யவும். இது கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் வராமல் தடுக்கும்.

உப்பு நீர்
கருவளையங்கள் வராமல் இருக்கமுகத்தை தினமும் உப்பு நீரால் சுத்தம் செய்யவும்.

தக்காளி சாறு
தக்காளிச் சாற்றினை முகத்தில் 20 நிமிடங்களுக்கு ஊற வைத்தால்,கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம்.

கற்றாழை
கற்றாழைச் சாற்றினை முகம்கன்னங்கள் மற்றும் மூக்கு பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவினால்கரும்புள்ளிகளில் இருந்து விடுபடலாம். .

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.