இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் இனமோதல்களினால் 2502 பேர் பலியாகி உள்ளனர். 28,668 பெர் காயமடைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் நடந்த இனமோதல்களில் மட்டும் 2502 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இன மோதல்களால் இந்திய மக்கள் எந்த அளவு பாதிப்படைந்து இருக்கிறார்கள் என்னும் தகவல் தெரியவந்துள்ளது.
வெளியாகியுள்ள தகவல்படி 2002 ஆம் ஆண்டு முதல் நடந்துள்ள 8473 இன மோதல்களில் 2505 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் 28,668 பேர் பாதிக்கப்பட்டுள்னர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை மட்டும் முசாபஃர் நகர் மாவட்ட கலவரம் உள்பட நாடுமுழுவதும் மொத்தம் 479 கலவரங்கள் நடைபெற்றுள்ளதாகவும், 1697 பேர் இக்கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
நன்றி : http://indru.todayindia.info
No comments:
Post a Comment