பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
முக்கிய அறிவிப்பு:
அன்பிற்கினிய மேலத் தெரு முஹல்லாவாசிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரகாத்துஹு
கடந்த 08.10.2013 அன்று நமது தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற்ற TIYA-வின் செயற்குழு
கூட்டத்தில் நமது முஹல்லா தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகத்தாரின் அங்கிகாரத்துடன்;
எடுக்கப்பட்ட தீர்மானித்தின்படி,
இன்ஷாஅல்லாஹ் அக்டோபர்'2013 மாதத்திற்குள் நமது முஹல்லாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி
முடிக்க இருக்கின்றோம். நம் முஹல்லா மக்கள் தொகை கணக்கு எடுப்பதினால் இன்ஷாஅல்லாஹ்
ஏற்பட இருக்கிற நன்மைகள் யாதெனில்.....
®
நமது முஹல்லா மக்களிடம் உள்ள ரேஷன் கார்டு,
பாஸ்போர்ட்,
வாக்காளர் அட்டை,
போன்ற முக்கிய
ஆவணங்களில் உள்ள பெயர் திருத்தங்களை செய்ய சிறப்பு முகாம் நடத்தி சரி செய்வது.
®
நமது முஹல்லா மக்களில் ரேஷன் கார்டு,
ஆதர்ஸ் கார்டு,
வாக்காளர் அட்டை
இல்லாதோர்களை இனம் கண்டு அவர்கள் அனைவருக்கு இல்லாத ஆவணங்களை பெற்று தர முயல்வது.
®
மத்திய-மாநில அரசுகளால் அளிக்கப்படுகிற ரேஷன் பொருட்கள் முறையாக
நமது முஹல்லாவில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக வினியோகம் செய்யப்படாமல்
இருக்கிற குறைகளை களைய முயற்சிகள் மேற் கொள்வது.
®
மத்திய-மாநில அரசுகள் சார்பாக அளிக்கப்படுகிற சிறுபான்மையினருக்கான
கல்வி உதவிகள், முதியோர் பென்ஷன், பெண்கள் கர்ப்ப கால உதவிகள்,
விதவை உதவித் தொகை,
போன்ற சலுகைகள்,
மானியங்களை முறையாக
பெற்றிட முயற்சிகள் மேற் கொள்வது.
இப்படி நமது முஹல்லாவாசிகளுக்கு பல தேவையான அடிப்படைக் காரியங்களை
செய்வதற்காக நமது தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA) இந்த முயற்சியில்
இறங்கி இருக்கிறது. அதனால் நமது முஹல்லாவில் உள்ள இளைஞர்கள் நமது முஹல்லாவில் உள்ள
அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக வந்து சில முக்கிய தகவல்களை முஹல்லாவாசிகள் அனைவரிடமும்
கேட்டுப் பெற இருக்கிறார்கள். இதன்படி தங்களின் வீடுகளுக்கு வரும் நம் முஹல்லா இளைஞர்களிடம்
மேலத் தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் முழு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு அளித்திட அன்புடன்
கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
தாஜுல் இஸ்லாம் சங்கம்(TIA) மற்றும்
தாஜுல்
இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA)
மேலத் தெரு, அதிராம்பட்டினம்.
No comments:
Post a Comment