Latest News

  

வரதட்சணை !


வர தட்சணையெனும் நோய் பரவி
தரணியெங்கும் மரண ஓலம்
பிச்சையிலும் கேடுகெட்ட
பிணம் தின்னிக் கழுகுகளாய்
பிடிங்கித் தின்னும் கூட்டம் ஒன்று
பதுங்கிக் கிடக்குது பாரிலின்று

பகல் கனவாய் ஆனது வாழ்வு
பாவி பெற்ற பைங்கிளி மகளே
நகலெடுத்த புகைப்படமாய்
நிறம் மாறிப் போனாயே
நிம்மதியைத் தொலைத்தாயே

வரதட்சணைக்கொடிய நோயாம்
வறியோரின் உயிரைக்குடிக்கும்
நச்சு விஷச்செடியாம்   
நாடெங்கும் பரவியதே
நலிந்தோரை வாட்டியதே

கன்னியரை சந்தைப் பொருளாய்
காணுகின்ற மானிடர் கூட்டம்
முதிர்க் கன்னித் தனி ரகமாய்
முகமறியா அரக்கனிடம்
சிறை பட்டுப் போயினரே
சிதைபட்ட வாழ்க்கையாகி

இளம் கன்னி மணமுடிக்க
இயன்றவரை தட்சித்து
இல்வாழ்வில் இணைந்த பின்னே
பொல்வாழ்வாய் ஆனதுவே
பொல்லாதவனின் கையில் சிக்கி

விண்ணுக்கும் உன் பெயரிடுவான்
வியந்து உலகம் பார்க்க வேண்டி
கண்ணுக்குள் வைத்திருப்பான்
கழுத்தில் மின்னும் தங்கம் நாடி

பெண்ணுக்குப் புகழுரையாம்
பேரு பெற்ற தலைவர் அரங்கில்
மண்ணுக்கும் பெண் அடிமை
மனிதன் வகுத்த கோட்பாட்டில்
அதிரை மெய்சா 

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 17-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.அதன் காணொளி இதோ...
நன்றி : சமூகவழிப்புணர்வு பக்கங்கள் 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.