பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பு வேண்டுகோள்!
அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முதல் துல் ஹஜ் மாத பிறை 11,12,13 (அதாவது அக்டோபர் 16,17,18,19 '2013) ஆகிய தினங்களில், நமது மேலத் தெரு முஹல்லாவாசிகளில் பெரும்பாலோர் குர்பானி கொடுத்து வருகிறார்கள் என்பது நாம் யாவரும் அறிந்ததே. நாம் கொடுக்கிற உழ்ஹிய்யா (குர்பானி) பிராணிகளின் முடிகளையோ, தோல்களையோ, மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் அதனை தர்மமாக மாத்திரம் தேவையுடைய ஏழைகளுக்கு வழங்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம் யாவரையும் பின் வரும் ஹதீஸ் மூலம் வலியுறுத்தி வழிகாட்டி உள்ளார்கள்.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை
நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க
வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும்
கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:- புகாரி 1716, முஸ்லிம் 2535
கண்ணியத்திற்குரிய மேலத் தெரு முஹல்லாவாசிகளுக்கு ஓர் முக்கிய
செய்தி என்வென்றால், இன்ஷாஅல்லாஹ் இந்த வருடம் முதல் நமது முஹல்லா தாஜுல் இஸ்லாம்
சங்க நிர்வாகத்தினரின் முழு ஒப்புதலுடன், நமது தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA) சார்பாக நமது
முஹல்லாவில் குர்பானி அறுக்கப்படுகிற பிராணிகளின் தோல்களை பொது வசூல் செய்வது என தீர்மானித்துள்ளோம்.
அதன்படி வசூலிக்கப்படும் தோல்களை விற்பனை செய்து வரும் தொகையில் நமது முஹல்லாவில் உள்ள
தேவையுடைய ஏழை-எளிய மக்களுக்கு உதவி வழங்க இருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் எந்த நோக்கத்திற்காக வசூல் செய்கிறோமோ, அதற்கு மாத்திரம் செலவு செய்வோம் என்றும்,
இதன் முழு கணக்கு
விபரங்களும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கபடும் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.
ஆகவே குர்பானி கொடுக்கிற
மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் நமது தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA)-தின் இந்த அன்பான
வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமாய் பிரியத்துடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாம் நமது முஹல்லாவில் உள்ள தேவையுடைய ஏழை-எளிய மக்களின் தேவையை நாமே ஒன்று சேரந்து
பூர்த்தி செய்வது நம் அனைவரின் தார்மீக கடமையாக இருக்கிறது. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து
நமது முஹல்லாவில் உள்ள இல்லாமையை ஒற்றுமையாய் இல்லாமல் ஆக்குவோம் என இந்த வருட தியாக
திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உறுதி எடுப்போம்! இன்ஷாஅல்லாஹ்!!!
பிரியமுடன்,
தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம்(TIYA)
மேலத் தெரு, அதிராம்பட்டினம்.
குர்பானி பிராணிகளின் தோல்கள் கொடுக்க தொடர்பு கொள்ள வேண்டிய
கைபேசி எண்கள் வருமாறு:
8012754794 -
9791387079 - 9659344703 - 9965396352 - 9488111121
No comments:
Post a Comment