- உடம்போடு மாறுபடுதல் இல்லாத உணவினை உண்பவரின் உயிருக்கு எந்தத் துன்பமும் இல்லை என்கிறார் வள்ளுவர்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், மாறிவரும் உணவுப்பழக்கத்தால் பெரும்பாலானோருக்கு என்னென்னவோ பாதிப்புகள்... நோய்கள்... துன்பங்கள்!
நாம்சாப்பிடும் உணவு வாய்க்கு ருசியாக இருந்தால் மட்டும் போதுமா... உடலுக்கு ஆரோக்கியமானதுதானா என்று யோசித்திருக்கிறோமா?
'தினமும் சத்தான உணவுதான் உண்கிறோம்’ என்று சொன்னாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சப்பாத்தி, ரொட்டி, முளைகட்டிய பயறுகள்,ஜூஸ் வகைகள் மற்றும் அயல்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் காய்கறிகள், பழங்களைத்தான் பெரும்பாலானோர் உண்கிறோம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலிருந்து ஓரளவு சத்துக்களைத்தான் பெறமுடியும். ஆனால், நாம் உண்பதற்குத் தேர்ந்தெடுக்கும் உணவுப் பொருட்கள் அனைத்துமே மூலிகை உணவாக அமைந்துவிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை அற்புதமான சத்துக்களும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்துவிடும். மூலிகைத் தாவரங்களின் மகத்துவத்தை அறிந்து அதன் பலன்களை உணர்ந்து, உணவாகச் செய்து சாப்பிடுவதால் மட்டுமே, நாம் வாழும் காலம் வரை உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
மூலிகைகளின் மருத்துவ உணவுகளை, சமையல் கலை நிபுணர் ராமச்சந்திரன் செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார்.
நோய்கள் வந்தால் சேர்க்கவேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
பழங்களின் பலன்கள், முளைகட்டிய தானியப்பால் தயாரிக்கும் முறைகள், மூலிகை சூப் வகைகள் என இயற்கை உணவுகளைச் செய்து காட்டி, அதன் பலன்களையும் பட்டியலிடுகிறார், இயற்கை மருத்துவர் ரத்தின சக்திவேல்.
இயற்கையோடு இணைவோம்! நோயின்றிக் காப்போம்!
''செட்டிநாடு உணவு வகைகள் என்றாலே, மசாலா வாசமும், சுள்ளென்ற காரமும்தான் நினைவில் வரும். ஆனால், செட்டிநாடு உணவுகளில் உடல் உறுதிக்கும்,ஆரோக்கியத்திற்கும் ஏற்ற உணவுகள் நிறைய இருக்கின்றன'' என்கிறார் கானாடுகாத்தானைச் சேர்ந்த சமையல் கலை நிபுணர் ராமச்சந்திரன்.
கேழ்வரகு இட்லி
செய்முறை: கேழ்வரகு, அரிசி, உளுந்து மூன்றையும் எட்டு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பிறகு நான்கு மணி நேரம் புளிக்க வைக்கவும். இதில் உப்பு சேர்த்து இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிடவும்.
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் மிகவும் நல்லது. இதில் கால்சியம் சத்து அதிகம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
சோளம் தினை தக்காளி தோசை
செய்முறை: சோளம்,
...
No comments:
Post a Comment