கூகிள் ப்ளஸ் இணையதளத்தில் நேற்று சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று Google+ Custom URL. இதன் மூலம் உங்கள் கூகிள்+ புரொபைல் அல்லது பக்கத்திற்கு எளிமையான சிறிய URL முகவரியைப் பெற முடியும். முன்பு இந்த முகவரியில் நீண்டதாக எண்கள் அமைந்திருக்கும். அதனால் அதனை நினைவில் கொள்வதும் பகிர்வதற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த வசதி இதற்கு முன்னரே பிரபலங்கள், கூகிள் பணியாளர்கள் ஆகியோருக்கு தரப்பட்டிருந்தது. தற்போது எல்லோருக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கூகிள்+ URL
புதிய Custom URL முறை
http://plus.google.com/+PonmalarS
இந்த மாதிரி எளிமையாகவும் சிறியதாகவும் உங்கள் புரோபைல் முகவரியை மாற்றிக் கொண்டால் நினைவில் கொள்ள மற்றும் பகிர எளிமையாக இருக்கும். இந்த வசதி பேஸ்புக்கில் ஏற்கனவே இருப்பது குறிப்பிடத் தக்கது. இது பற்றிய அறிவிப்பு பலருக்கு மின்னஞ்சல் அனுப்பப் பட்டு வருகிறது. இல்லையெனில் உங்கள் புரோபைல் சில தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
* கூகிள்+ புரோபைலுக்கு புகைப்படம் வைத்திருக்க வேண்டும்.
* குறைந்தது 10 பேர் பின் தொடர வேண்டும் (Followers)
* உங்கள் கணக்கு ஆரம்பித்து 30 நாட்கள் ஆகியிருக்க வேண்டும். இவையிருப்பின்,
1.கூகிள்+ தளத்தில் இடதுபுறத்தில் உள்ள மெனுவில் Profile என்பதைக் கிளிக் செய்து பின்னர் About என்ற டேபில் செல்லவும். அந்தப் பக்கத்தின் மேல்புறத்தில் ஒரு செய்தியைக் காணலாம். ”Your Profile is preapproved with Custom URL: google.com/+PonmalarS". அதன் பக்கத்தில் Get URLஎன்பதில் கிளிக் செய்யவும். இல்லையெனில் Links பகுதியில் Google+ URL என்பதைக் காணலாம்.
2. அடுத்த விண்டோவில் I Agree என்ற கட்டத்தில் டிக் செய்யவும். கூகிள் முடிவு செய்திருக்கும் முகவரி பிடிக்க வில்லையெனில் ”Request a different one" என்பதில் கிளிக் செய்து புதிய முகவரியைப் பெறலாம். அடுத்து Change URL மற்றும் Confirm Choice என்ற பட்டன்களைக் கிளிக் செய்யவும்.
3. அடுத்து எனக்கு மொபைல் மூலம் உறுதிப் படுத்த வேண்டும் எனக் கூறியது. மொபைல் எண் கொடுத்தால் ஒரு நம்பர் நமது மொபைலுக்கு அனுப்பப் படும். அதனை இங்கே கொடுத்தால் நமது URL முகவரி மாற்றம் Verify ஆகிவிடும். இது ஒருவேளை 2-Step Security பயன்படுத்துவதாலோ தெரியவில்லை.
எனது ப்ரோபைல் முகவரி - http://plus.google.com/+PonmalarS
உங்கள் பெயரைக் கொண்ட மற்றவர்கள் Custom URL பெறுவதற்கு முன் விரைவாகப் பெற்று விடுங்கள். இல்லையெனில் நீங்கள் விரும்பிய பெயர் கிடைக்காது.
அப்டேட் செய்யப்பட்ட பின்னர் புரொபைலில் Links பகுதியில் காணலாம்.
இதே போல Google+ Pages க்கு பெற உங்கள் வலைத்தளத்தை பக்கத்தில் இணைப்பு (Link) கொடுத்திருக்க வேண்டும். இதில் தற்போது நீங்கள் விரும்பும் முகவரி கிடைக்காது. கூகிள் கொடுப்பதைத் தான் பெற முடியும். பொன்மலர் பக்கத்திற்கு கிடைத்த URL :google.com/+PonmalarsBlogspot
நன்றி : பொன்மலர் பக்கங்கள்
No comments:
Post a Comment