டெல்லி: மத்திய அரசு அலுவலகங்களில் ஜிமெயில், யாஹூ உள்ளிட்ட இலவச மின்னஞ்சல்களை தனிப்பட்ட முறையில் ஊழியர்கள் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தத் தடை டிசம்பர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும், ஊழியர்கள் பெருமளவு பணிநேரத்தில் தனிப்பட்ட மின்னஞ்சல்களைப் பார்வையிட்டு வருவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தடை வரவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படிப்படியாக, ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைத் தளங்களும் தடை செய்யப்படலாம் என்று பேசப்படுகிறது.
No comments:
Post a Comment