காங்கிரசு மீதான அதிருப்தியை முன்னிறுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதரவுடன் மோடியை பிரதமர் பதவிக்கு கொண்டு வர ஆளும் வர்க்கங்கள் துடிக்கின்றன. உலகமயத்தை இன்னும் வீச்சாக கடும் பொருளாதார சுரண்டல்களோடு நிறைவேற்றிக் கொள்வதற்கு மோடியை பயன்படுத்துவது அவர்களது இலக்கு. காரணம் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களை விடவும் சொந்த மக்களை விரட்டி நிலம் பறித்து, பல்வேறு சலுகைகளை பன்னாட்டு மற்றும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு மோடி அள்ளி வழங்கியிருக்கிறார். இதை இந்தியா முழுவதும் விரைந்து நிறைவேற்றுவது அவர்களது நோக்கம்.
இதற்கு மதம் சார்ந்த உணர்ச்சியை கிளப்புவது பயனளிக்குமென்பதால் காங்கிரசுக்கு மாற்றாக மோடியை ஆதரித்து கார்ப்பரேட் ஊடகங்களும் தினுசு தினுசாக பிரச்சாரம் செய்கின்றன. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் இந்து ராஷ்டிரக் கனவுகளை நனவாற்றுவதற்காக பார்ப்பனிய இந்துமதவெறி இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இப்படி இந்துமதவெறியும், ஏகாதிபத்திய சுரண்டலும் கரம் கோர்த்துக் கொண்டு நம்மை அடக்கி ஆள மோடி வருகிறார்.
தமிழகத்தில் சீந்துவாரின்றி இருந்த இந்துமதவெறி அமைப்புகளும், பாஜகவும் மோடியின் வருகையை வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ள துடிக்கின்றன. இந்நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தில், தந்தை பெரியாரின் சுயமரியாதை மண்ணில் மோடி வருகிறார் என்பது நமது சமூக அக்கறைக்கு விடப்பட்டிருக்கும் சவால்.
மோடியின் பொதுக்கூட்டம் முதலாளிகளின் பணத்தில், தமிழக அரசின் பாதுகாப்பில் நடக்கலாம். ஆனால் நாம் சும்மா இருந்தால் வரலாறு மன்னிக்குமா?
குஜராத்தில் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த ஒரு கொடூரமான கொலைகாரன் இத்தனை ஆர்ப்பாட்டங்களோடும், சப்தங்களோடும் தமிழகம் வருகிறான் என்றால் அது பார்ப்பனிய எதிர்ப்பில் வீறு கொண்டு போராடிய தமிழகத்திற்கு விடப்பட்ட சவால் இல்லையா?
பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் திராவிட இயக்கங்கள் இன்று வாயை மூடிக் கொண்டு இருக்கின்றன. வைகோ போன்றவர்கள் பாஜகவை வாய் வலிக்க புகழ்ந்து கொண்டு அடுத்த கூட்டணிக்கு அடி போடுகிறார்கள். பெரியார் பெயரை விரும்பியோ விரும்பாமலோ உச்சரிக்கும் தமிழின அமைப்புகள் பலவும் ஒரு அடையாள கண்டனமோ இல்லை அதுவும் இல்லாமலோ வாய் மூடி இருக்கின்றன.
இந்நிலையில் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் வாரிசாக புரட்சிகர அமைப்புகள் களமிரங்கியிருக்கின்றன. இது இன்றைக்கு மட்டும் செய்யப்படும் போராட்டம் அல்ல. பாபர் மசூதி இடிப்பிலிருந்து எமது அமைப்புகள் இந்துமதவெறி அமைப்புகளை குறிவைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. பல இடங்களில் இந்தமதவெறி பாசிஸ்ட்டுகளோடு நேரடியாகவே மோதியிருக்கிறோம். பல நூறு வழக்குகள் எம்மீது உண்டு.
இதன் தொடர்ச்சியாக இப்போது திருச்சி மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான எமது தோழர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மோடியை எதிர்த்து மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார்கள். மோடியும், பாஜகவும் இசுலாமிய மக்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை ‘இந்துக்களுக்கும்’ எதிரி என்பதை புரியவைத்து வருகிறார்கள். செல்லுமிடங்களிலெல்லாம் மக்களுடைய கேள்விகளுக்கு விடையளித்து பொறுமையாக பிரச்சாரம் செய்கிறார்கள் தோழர்கள். கருத்தை புரிந்து கொண்ட மக்கள் இதற்காக நிதியுதவி செய்து இந்த பிரச்சார இயக்கத்தை ஆதரிக்கின்றனர்.
ஆக மோடி தமிழகம் வருகிறார் என்றால் அதை எதிர்க்க வேண்டும் என்பது நம் அனைவருக்குமுள்ள கடமை. அந்த கடமையில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக திருச்சியில் வரும் ஞாயிறு 22.9.2013 அன்று நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அழைக்கிறோம். தமிழகம் முழுவதிலிருந்தும் நண்பர்கள் வரவேண்டும்.
சென்னையில் புதிய கலாச்சாரம் அலுவலகத் தோழர்கள் மூலமாக வாகன ஏற்பாடு செய்து திருச்சி பொதுக்கூட்டத்திற்கு செல்வதாக இருக்கிறோம். ஞாயிறு காலையில் கிளம்பி திருச்சி சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு திரும்பி திங்கள் அதிகாலையில் சென்னைக்கு வந்து விடலாம். வாகனச் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.
நண்பர்கள், வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
மோடிக்கு எதிர்ப்பு காட்டும் கடமையில் உங்களையும் பங்கேற்க் கோருகிறோம்.
வர விரும்பும் நணபர்கள் தோழர் பாண்டியன் (புதிய கலாச்சாரம் அலுவலக நிர்வாகி) (91) 99411 75876 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும். அல்லது உங்களைப் பற்றிய விபரங்களோடு vinavu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
செப்டம்பர் 26 அன்று ஏகாதிபத்திய கைக்கூலி, உழைக்கும் மக்களின் எதிரி கொலைகார மோடி திருச்சிக்கு வருவதை கண்டித்து மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புக்களால் பிரச்சார இயக்கம் முழு வீச்சுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தினமும் ஆயிரக்கணக்கான பிரசுரங்கள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 22-ம் தேதி தோழர் மருதையன் பேசவிருக்கும் பொதுக் கூட்டத்திற்க்காக சிக்னல் சந்திப்புகளில் பிரச்சாரம், வேன் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள் என பல்வேறு வகையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தோழர்கள் பலரும் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி நகரை கலக்கி வருகிறார்கள்.
உழைக்கும் மக்களிடையே பாஜக, ஆர்.எஸ்.எஸ் காவிகளின் பொய்பிரச்சாரத்தின் மூலம் பூதாகரமாக சித்தரிக்கப்பட்ட மோடியின் முகம் நமது புரட்சிகர அமைப்புகள் நடத்திவருகின்ற பிரச்சாரத்தால் கிழிந்து தொங்குகிறது.
பெரியார் பிறந்த மண்ணில் காவிப்படைகளுக்கு கல்லறை கட்டுவோம். மோடியின் வருகைக்கு மௌனம் சாதித்துவரும் பெரியாரை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளையும்,ஓட்டுக்கட்சிகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.
மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்
செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர், திருச்சி.
செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர், திருச்சி.
வாருங்கள், தமிழகத்தை பார்ப்பனியத்தின் கல்லறையாக்குவோம்.
No comments:
Post a Comment