மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான அக்கட்சியின் நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர் சாவுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைதுச் செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் துணைத் தலைவர் வன்சாரா கடந்த செப்டம்பர் 1 அன்று குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளரும் உள்துறைச் செயலாளருக்கு பத்து பக்கத்தில் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய மோதல் சாவுகள் உள்ளிட்ட குற்றங்கள் குறித்த உண்மைகளும், கருத்துகளும், ஒப்புதல் வாக்குமூலங்களும் இடம் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment