சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒவ்வொரு பிளாட்பாரமாக ரோந்து சுற்றி வருகிறார்கள்.
பயணிகள் கொண்டு வரும் பொருட்களும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தின் நுழைவு வாசல் மற்றும் பயணிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் சென்னையில் கூட்டம் அதிகம் உள்ள எழும்பூர், மாம்பலம், தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையங்களிலும் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்குள் சனிக்கிழமை முதல் பார்வையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை நகரின் எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்படுகிறது. லாட்ஜூகளிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நன்றி : நக்கீரன்
No comments:
Post a Comment