உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) தொடங்ககம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இளம் தாய்மார்களுக்கும், பொதுமக்களுக்கும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தை உணவூட்டுதல் முறை குறித்தும் டாக்டர்கள் வியாழக்கிழமை விளக்கம் அளிக்க உள்ளனர்.
மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கும் பெண்கள் கல்லூரிகளுக்கும் சென்று அரசு பெண் மருத்துவர்கள் உலக தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.
No comments:
Post a Comment