முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜானையொட்டி கடந்த 11 ஆம் தேதி மனிதாபிமான பிரசாரத்தை துபை மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தொடங்கி வைத்தார்.அப்போது அவர் இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு 30 லட்சம் ஆடைகளை விநியோகித்தார்.
தொடக்கத்தில் 10 லட்சம் குழந்தைகளுக்கு மட்டுமே ஆடை வழங்க திட்டமிட்டிருந்தார்.ஆனால் இதை விட கூடுதலாக ஆடை தேவைப்பட்டதால் 30 லட்சம் குழந்தைகளுக்கு அவர் ஆடை வழங்கினார்.
இதுபற்றி ஷேக் முகமது கூறும்போது, ஐக்கிய அரபு எமிரேட் மக்களின் தாராள குணத்தால் இப்போது 30 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்திய ஐக்கிய அரபு எமிரேட்டின் ரெட் கிரசன்ட் ஆணையம் மற்றும் இதர அமைப்புகளையும் மனதார பாராட்டுகிறேன். ஐக்கிய அரபு எமிரேட் நாடானது தொண்டு செய்வோரின் தலைநகராக விளங்குகிறது என்றார்.
No comments:
Post a Comment