வந்திருந்த அனைவரையும் TIYA வின் அமீரகத்தலைவர் அப்துல் மாலிக், செயலாளர் நூர் முஹம்மது [ நூவண்ணா ], பொருளாளர் அப்துல் காதர் உள்ளிட்ட சக நிர்வாகிகள் அனைவரும் அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
இஃப்தார் உணவுக்காக அதிரையின் பிரத்தியேக சுவையுடன் கூடிய நோன்புக்கஞ்சியுடன் கடப்பாசி,பிரியாணி,சமூசா, பழவகைகள், ஆகிய உணவுப்பொருட்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மஹல்லாவாசிகள் கலந்து கொண்டு இஃப்தார் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நம்மவர்களை சிறப்பானதொரு நிகழ்ச்சியின் மூலம் புகைப்படத்தில் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது !
ReplyDeleteஅனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்...
அமீரக TIYA வின் முதல் இப்தார் நிகழ்ச்சிக்கு வாழ்த்துகள்.பெரும்பாலான ஊர்கள் சார்பில் அமீரகத்தில் இப்தார் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுயிருக்கும் நேரத்தில் அதிரையின் சார்பில் ஏற்பாடு இல்லாதது வருத்தமாக இருந்த நேரத்தில் அதிரையர்களின் ஒரு அங்கமான TIYA வின் இப்தார் ஏற்பாடு வரவேற்க்கத்தக்கது.இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் அதிரையின் அனைத்து முஹல்லாஹ் சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து சகோதரத்துவ நல்லிணக்கத்தோடு கருத்து வேறுபாடுகளை மறந்து அதிரையர்கள் அனைவரும் செயல் பட வேண்டும்.TIYA-வின் முன்முயற்சி அதற்கான அடித்தளமாக அமையும்.நிர்வாகிகள் மாலிக் காக்கா,சகோ நூர் முஹம்மத்(நூவன்னா), சகோஅப்துல் காதர் மற்றும் TIYA உறுப்பினர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete------------------
இம்ரான்.M.யூஸுப்
மக்கள் தொடர்பு செயலாளர்
அமீரக சமூகநீதி அறக்கட்டளை
MASHA ALLAH
ReplyDeleteவாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி
ReplyDelete