வளர்ச்சியடைந்த நாடுகளில் வாழ்வோர் அவசர மருத்துவ சேவையை அழைப்பதன் மூலம் உடனடியாக வைத்திய உதவிகளைப் பெறுகின்றனர். இவ் வசதி எம் தாய் நாடுகளில் இல்லாதிருப்பதால் உடனடியாக நாம் ஏதாவது உபாயம் செய்து வைத்திய உதவி கிடைக்கும்வரை இருதயத்தை செயல்பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றோம். அதற்கான ஒரு யுக்தியை வைத்திய நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன் விபரம் கீழே விபரிக்கப் பெற்றுள்ளது.
மாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி?
உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாகவே இருந்திருந்திருக்கின்றார்கள். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 – 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.
மாரடைப்பு என்றால் என்ன? அது எவ்வாறு ஏற்படுகிறது? யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும்? அதன் அறிகுறிகள் என்ன? அதை குணப்படுத்துவது எவ்வாறு?
கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது.
இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம்.
ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன.
இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன.
சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு.
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது….?
வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்.?
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: “தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும்”, ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்”..
பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்….!
நன்றி: சித்தார்கோட்டை.காம்
No comments:
Post a Comment