காரைக்கால்: காரைக்கால் வக்பு வாரிய இடத்தில் தனியார் சாலை போட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. தொடர்ந்து, டிப்பர் லாரிகளை வக்பு வாரிய நிர்வாகிகள் சிறை பிடித்து போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் அருகில் காரைக்கால் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்பு வாரிய நிலம் 4 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டியுள்ள நிலத்தை தனியார் ஒருவர் பிளாட் போட்டுள்ளார். அந்த பிளாட்டுக்கு சாலை அமைக்க, வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் மண் நிரப்பியுள்ளார்.
விபரம் அறிந்த வக்பு வாரிய நிர்வாகிகள், புதுச்சேரி தலைமை வக்பு வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்குள்ள கலெக்டர் மூலம், காரைக்கால் கலெக்டர் முத்தம்மாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். முத்தம்மா, காரைக்கால் தாசில்தாரை சம்பந்தபட்ட இடத்தில் ஆய்வு நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் ஆய்வு நடத்திய தாசில்தார் முத்தம்மாவிடம் அறிக்கை சமர்பிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
விபரம் அறிந்த வக்புவாரிய நிர்வாகிகள், நேற்று முன்தினம் இரவு தனியார் போட்ட சாலை அருகே நின்ற 3 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காரைக்கால் நகர போலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விரைந்து சென்று, சாலைக்காக ஆக்கிரமித்த நிலத்தை உடனே அகற்றவும், சாலைக்காக போட்ட மணலை உடனே அப்புறப்படுத்தவும் தனியார் நில உரிமையாளருக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அங்கு 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கே.கோவிந்தராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் காரைக்கால் நகரமைப்பு குழும தலைவராகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார் எனபது குறுப்பிடத்தக்கது. ஆளும் கட்சியில் இருந்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள இவரின் இந்த செயலை கண்டித்து இவரின் பதவியை பறிக்க வலியுறித்தி காரைக்காலில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்பினர்களும் போர் கொடி தூக்கியுள்ளனர்.
இதுபற்றி காரைக்கால் மாவட்ட த.மு.மு.க தலைவர் ஷேக் அலாவுதீன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது:
காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் பகுதியில் வக்புக்கு சொந்தமான இடத்தை காரைக்கால் பகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவரும், காரைக்கால் நகர அமைப்பு குழும தலைவருமான கே.கோவிந்தராஜ் அபகரித்து உதயம் பில்டர்ஸ் பெயரில் பிளாட் போடுவது கண்டிக்கத்தக்க செயலாகும், பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் சொத்துகளை அபகரிக்க முயல்வதை ஏற்று கொள்ள முடியாது.
எனவே, புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி காரைக்கால் நகர அமைப்பு குழும தலைவர் பதவியிலிருந்து கே.கோவிந்தராஜை உடனடியாக நீக்க வேண்டுமென்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டு கொள்கிறோம். மேலும், காரைக்கால் பகுதியில் உள்ள வக்பு சொத்துகளை மீட்க வக்பு நிர்வாக சபையினர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும்க்கும் த.மு.மு.க துணை நிற்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment