சகோதரி பிரபாவை போன்று எல்லா பெண்களும் தைரியமாக இது போன்று செய்தால் நாட்டில் குற்றங்கள் குறைய நிறைய வாய்ப்புகள் உண்டு சகோதரியின் செயலை நான் பாரட்டுகிறே.
ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட செய்தி இந்தியாவில் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்த நிலையில், தமிழகத்திலும் நேற்று முன்தினம்இளம்பெண் ஒருவர், அதுவும் மருத்துவர், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டுள்ளார்.
இதுபற்றி கூறப்படுவதாவது:
தஞ்சையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு சொகுசுப் பேருந்து ஒன்று வந்தது. அந்தப் பேருந்தில் விழுப்புரத்தில் பிரபா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் ஏறினார். திருக்கோவிலூரைச் சேர்ந்த பிரபா எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்பதும் குறிக்கத்தக்கது. வேலைக்காக நேர்முக தேர்வு ஒன்றில் கலந்துகொள்ள சென்னை புறப்பட்ட பிரபாவிடம் அவரது இருக்கைக்கு பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்த 2 வாலிபர்கள் நேரடியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். முதலில் அந்த வாலிபர்களை பிரபா கண்டித்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
பொறுத்துப் பொறுத்து, பார்த்துவிட்டு, பொங்கி எழுந்த பிரபா ஓட்டுநரிடம் பேருந்தில் விளக்கை போடும்படியும் காவல் நிலையத்திற்கு பேருந்தை கொண்டுச் செல்லும்படியும், ஆக்ரோஷமாகக் கோரியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர்களுக்கு செருப்படியும் கொடுத்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர், விளக்கைப் போடாமல், பிரபாவை திட்டினார். "பேசாமல் வாம்மா, பஸ் பயணத்தில் இதுவெல்லாம் சகஜம்" என்று கூறிய ஓட்டுநர், தொல்லை கொடுத்த வாலிபர்களுக்கு ஆதரவாகவும் பேசினார். பயணி ஒருவரும் பிரபாவையே கண்டித்தார்.
பிரபாவின் தந்தை, அரசு நிர்வாக பொறியாளராக வேலை பார்க்கிறார். பேருந்தில் வரும்போதே, தனக்கு ஏற்பட்டுள்ள நிலை குறித்து தனது தந்தைக்கு பிரபா செல்பேசியில் தகவல் கொடுத்தார். அவரது தந்தையும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.பிரபாவிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டவர்களை, சென்னை வந்தவுடன் மடக்கிப்பிடிக்கும்படி, ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டதன் பேரில் கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன், இணை ஆணையர் சண்முகவேல், துணை ஆணையர் சேவியர்தன்ராஜ், உதவி ஆணையர் செந்தில்குமரன் ஆகியோர் மேற்பார்வையில், ஆய்வாளர் சாம்வின்சென்ட், பெண் உதவி ஆய்வாளர் நதியா ஆகியோர் காவல் படையுடன், கோயம்பேடு சொகுசுப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட பேருந்து கோயம்பேடு நிலையம் வந்தவுடன், வாலிபர்கள் இருவரையும் காவல் அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். அவர்கள் இருவரும் ஆலங்குடியை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் பெயர் சரவணன் (வயது 19), இன்னொருவர் குருஷியாம் (20). சரவணன் பொறியியல் மாணவர். குருஷியாம் கோவில் அர்ச்சகர். என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.வாலிபர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக பேருந்து ஓட்டுநர் ஞானதுரையும், பயணி சிவகுமாரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான 4 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment