கோட்டைப்பட்டினத்திலிருந்து அதிரை வழியாக தஞ்சாவூர் செல்லும் தனியார் பஸ் நேற்று [ 29-07-2013 ] பிற்பகல் 2.30 மணி அளவில் அதிரை அருகே கவிழ்ந்து 21 பெண்கள் உள்பட 42 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பஸ் அருகில் பனை மரம் மற்றும் மின் கம்பத்தில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
இதில் பஸ்சில் பயணம் செய்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 47 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவில் பயணம் செய்து படுகாயமடைந்த அதிரை சுரக்காய்கொல்லை தெருவை சேர்ந்த சேக் அலி (49), அதிரை புதுத்தெரு அலி மொய்தீன், பட்டுக்கோட்டை ஆட்டோ டிரைவர் பாலாஜி (23), பஸ்சில் பயணம் செய்த புதுவயல் சுசிலா (52), புதுப்பட்டினம் சுசிலா (40) ஆகியோர் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆட்டோ ஒட்டுனர் பாலாஜி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் மற்றவர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கராஜன் மற்றும் பட்டுக்கோட்டை நகர மன்றத்தலைவர் ஜவஹர் பாபு ஆகியோர் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்தனர். மேலும் மருத்துவரிடம் தீவிர சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டனர்.
பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள், நர்சுகள் இல்லை என்றும் சரியான சிகிச்சை மற்றும் முதலுதவி செய்யவில்லை என்றும் கூறி அதிரை கல்லூரி மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் உள்பட ஏராளமான பேர் ஆஸ்பத்திரி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், தாசில்தார் முத்துக்குமரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்கமலக்கண்ணன் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சண்முகவேல், தென்னை நல வாரிய உறுப்பினர் மலைஅய்யன், முன்னாள் எம்.எல்.ஏ ராமச்சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வேலை நேரத்தில் போதிய டாக்டர்கள் இருக்க வேண்டும். ஸ்கேன் வசதி, போதிய உபகரணங்கள் மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சரியான சிகிச்சை அளிக்காமல் தஞ்சை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது நிறுத்த வேண்டும் என்று மறியல் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் அதை சரி செய்வதாக கூறியதன் பேரில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலைமறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்
போதிய மருத்துவ வசதியின்மை இல்லாத காரணத்தால் தஞ்சைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைக்கு நாம் தள்ளபடுகிறோம் இந்த இடைப்பெற்ற நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கும், நடக்கிறது மனிதன் உயிருக்கு விலை இல்லாமல் போய்விட்டடு இதைவிட மோசமான நிலை தான் அதிரை அரசு மருத்துவமனையில். முதலுதவி சாதனங்கள் அனைத்தும் அதிரை, மற்றும் பட்டுக்கோட்டைக்கு அவசியம் அவசர பிரிவு சாதங்கள் அரசு உடன் ஏற்ப்படுத்திதரவேண்டும்.சம்மந்தப்பட்ட அமைச்சகத்தை சார்ந்தவர்கள் முறையாக வந்து இந்த மருத்துவமனைகளை பார்வையிட வேண்டும் இவைகள் அனைத்தும் சரியாக இருந்தால் விபத்துக்கள் ஏற்ப்படும் போது. உயிர்ச்சேதத்தை குறைக்க முடியும் பொது மக்களுக்கும் அரசு மருத்துவமனையின் மேல் நம்பிக்கை வரும். அதிரையும் சேது வழி சாலையாகி விட்டதால் தினம் அல்லது இரண்டு தினங்களுக்கு ஒருமுறையாவது விபத்துக்கள் ஏற்ப்பட்டு வருகிறது இதை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட அமைச்சகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ReplyDelete