அதிரை 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் சகோதரி ஒருவரிடமிருந்து தொலைபேசி வழியாக குடிநீர் தொடர்பான கோரிக்கை ஒன்று நம்மிடம் வந்தது. அதில் தங்கள் வீட்டிற்கு வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கவலையுடன் குறிப்பிட்டார்.
உடனே களத்தில் இறங்கிய அதிரை நியூஸ் குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் இறுதியில் அந்த சகோதரி குறிப்பிட்டது உண்மைதான் என நிரூபணமாகியது.
இதுகுறித்து அந்த சகோதரி நம்மிடம் மேலும் கூறியதாவது :
கடந்த சில நாட்களாக சோப்பு நுரையுடன் கூடிய கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவதால் குடிநீரை குடிக்கவே முடிய வில்லை. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளது என்றார்.
இதுகுறித்து இந்தப்பகுதியின் வார்டு உறுப்பினர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் அவர்களிடம் தொலைபேசியில் பேசிய வகையில்...
நீங்கள் குறிப்பிடும் சகோதரியின் சார்பாக கோரிக்கை பெறப்பட்டுள்ளது. அவர்களின் வீட்டிற்கு செல்லும் குடிநீர் இணைப்பில் மாத்திரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார் நம்பிக்கையுடன்.
No comments:
Post a Comment