டெல்லி: திகார் சிறையில் உள்ள கைதிகளில் 45 இந்து கைதிகள் புனித ரமலான் நோன்பு இருந்து வருகின்றனர். புனித ரமலான் மாதம் துவங்கியதையடுத்து டெல்லி திகார் சிறையில் உள்ள சுமார் 1,800 முஸ்லிம் கைதிகள் நோன்பு இருந்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து 45 இந்து கைதிகளும் நோன்பு இருந்து வருகின்றனர். கடந்த 11ம் தேதியில் இருந்து நோன்பு இருந்து வரும் அந்த 45 பேரும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருக்க திட்டமிட்டுள்ளனர். கைதிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று திகார் சட்ட அதிகாரி சுனில் குப்தா தெரிவித்தார்.
கைதிகள் நோன்பு வைக்க அவர்களுக்கு உணவு மற்றும் நோன்பு திறக்க பழம், ஸ்நாக்ஸ் மற்றும் இதர உணவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குப்தா மேலும் தெரிவித்தார். திகாரில் மொத்தம் 6,000 கைதிகளை அடைக்க அனுமதி உள்ளது. ஆனால் தற்போது அங்கு 13,000 கைதிகள் உள்ளனர். அதில் 3,500 பேர் முஸ்லிம்கள்
No comments:
Post a Comment