துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்கி வெற்றியாளர்களாக விளங்கும் இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு, அவர்களின் பணியாட்களின் எண்ணிக்கை, வர்த்தக வரவு – செலவு, அவர்கள் அறப்பணிக்கு செலவிடும் தொகை, அவர்களின் ஆளுமை என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி வளைகுடாவில் 100க்கும் மேற்பட்ட லூலு அங்காடிகளை கொண்டுள்ள எம்கே குழுமத்தின் தலைவர் யூசுப் அலி முதலிடத்திலும், மேக்ஸ், செண்டர் பாயிண்ட் முதலான ரீடெயில் வணிக கடைகளை வைத்துள்ள லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மிகி ஜக்தியானி இரண்டாம் இடத்திலும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி மருத்துவமனைகளின் தலைவர் பி.ஆர்.ஷெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
ஷோபா கட்டுமான குழுமத்தின் தலைவர் மேனன் நான்காம் இடத்திலும் ஜெம்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் சன்னி வர்கி ஐந்தாம் இடத்திலும் மூப்பன் மருத்துவமனை குழுமங்களின் தலைவர் ஆசாத் மூப்பன் ஆறாம் இடத்திலும் டானுபே குழுமத்தின் தலைவர் ரிஜ்வான் சாஜான் ஏழாம் இடத்திலும் உள்ளனர்.
மேலும் இப்பட்டியலில் ஈ.டி.ஏ குழுமங்களின் தலைவரான தமிழகத்தை சார்ந்த சையது சலாஹுத்திம் எட்டாவது இடத்திலும் டோட்சால் குழும தலைவர் ராஜன் கிலாசந்த் ஒன்பதாவது இடத்திலும் அல் சிராவி குழும தலைவர் மோகன் வல்ரானி பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
No comments:
Post a Comment